மதுரையில் சசிகலா- ஆதரவாளர்களைச் சந்திக்கிறார்!

வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா
Published on

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடத்திய அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா, எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதலமைச்சர் பதவியை அளித்த தன்னை முதுகில் குத்தியதாகவும் அவர் காட்டமாகப் பேசியது, கவனம் பெற்றது. தமிழ்நாட்டுச் சிறைக்குத் தன்னை மாற்றியிருந்தால் தன்னை உயிரோடு விட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் இன்று மதுரையில் தங்கியுள்ளார்.

பிற்பகல் 3 மணிக்கு மேட்ரியாட் ஓட்டலில் தன் ஆதரவாளர்களை அவர் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

”அவரைச் சந்திக்க வரும் தொண்டர்கள் பூங்கொத்து, சால்வை, புத்தகங்கள் உட்பட்ட எந்தவித பரிசுப் பொருட்கள் அளிப்பதையும் தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.” என்றும் சசிகலாவின் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com