மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் மீனவர்கள் பலி!

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் மீனவர்கள் பலி!
Published on: 

கடந்த அக்டோபர் மாதம் 29 தேதி அன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற போது வங்கக் கடலில் ஏற்பட்ட முரசு புயலின் காரணமாக படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாகி உள்ளனர்; இதற்கு ஒன்றிய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முரசு புயல் காற்றாழுத்தம் வலுவடைந்து வருவதை வானிலை ஆய்வு மையம் அறிவித்தவுடன் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைதிருப்ப வேண்டும் என்று அறிவித்து விட்டு தங்கள் கடமை முடிந்தது என்று அரசுகள் மெத்தனமாக இருந்து விட்டன.” என்று சாடியுள்ளார்.

”இதுபோன்ற காலங்களில் போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு சென்னை தலைமைச் செயலகத்திற்கு அருகிலே இருக்கும் இந்திய கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்தை யும் தாம்பரம் வீமனப் படை தலைமையகத்தின் உதவியையும் நாடி மீனவர்களின் ஜீபியஸ் கருவி சீ டாட் கருவி அல்லது கைபேசி அலைவரிசை மூலம் சேட்டிலைட் வான்நோக்கி மூலம் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீனவர்கள் கரைசேர்வதை மத்திய மாநில அரசுகள் உறுதிப் படுத்தி இருக்க வேண்டும்

குதிரை ஒடியபின் லாயத்தை மூடுவதைப் போன்று முரசு புயலில் சிக்கி சூர்யா, மோகன், முருகன், விஜயகாந்த், குப்புசாமி, அரவிந்தன், குப்புசாமி, ஆகிய ஏழு மீனவர்கள் சாவைத் தழுவி எஞ்சிய நாராயணன், ராஜேஷ் ஆகிய இரண்டு பேரின் நிலைமை என்ன என்று தெரியாமல் அந்த குடும்பங்கள் நிர்க்கதியாக இருக்கும் போது ஏற்படும் கொந்தளிப்பு உணர்வுகளை ஜனநாயக பூர்வமாக அனுகாமல் காவல்துறையை ஏவி அடக்குமுறையை கையாள்வது அது மற்றொரு பிரச்சினைக்கு வழிவகுக்கும்

விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் முக்கண் முதல்வன் சிவ பெருமானையே சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம் சங்கை அறிந்துண்டு வாழ்வோம் அரனே உன் போல் இறந்துண்டு வாழ மாட்டோம் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற முத்தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரரின் வாரிசுகள் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்

மீனவர்கள் தானே என்று இடதுகை அணுகுமுறை மேற்கொண்டு இறந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினால் அமைதியாகி விடுவார்கள் என்று கருதிவிட வேண்டாம்

ஏற்பட்ட பேரிழப்பிற்கு நிவராணம் என்ன இனி இது போன்று நடவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி த.வெ.க. அரசு தீர்வைக் காணவேண்டும்.” என்றும் மல்லை சத்யா கூறியுள்ளார்.