தமிழ் நாடு
முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் இறுதி மரியாதை நிகழ்வில் இரண்டாம் முறையாகக் கலந்துகொண்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.
நேற்று அன்னாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தவர், இன்று மீண்டும் அரசு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் பங்கேற்றார்.
அரசு சார்பில் சிறப்பு மலர் வளையத்தை முதலமைச்சர் வைத்தபோது, அங்கு குழுமியிருந்த மற்றவர்கள் வீரவணக்க முழக்கமிட்டபடி இருந்தனர்.
முதலமைச்சரும் சேர்ந்து முழக்கமிட்டார்.
பின்னர் அவர்களைக் கைகளால் அமர்த்திவிட்டு, தானாகவே, தகைசால் தமிழருக்கு வீரவணக்கம், வாழ்நாள் போராளி நல்லகண்ணுவுக்கு வீரவணக்கம், செவ்வணக்கம் என முழக்கமிட்டார்.
அவரைப் பின்பற்றி வைகோ, திருமா உட்பட்ட மற்ற தலைவர்களும் அதே முழக்கத்தை எழுப்பினார்கள்.
இது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.