மிகச் சிறிய தொகுதியாக ஆனது துறைமுகம்!

அர்ச்சனா பட்நாயக்
அர்ச்சனா பட்நாயக்
Published on

தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதி மாறியுள்ளது. 

"வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ;  பெண்கள் 2,74,254 ;  திருநர் 116).

அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 ;  பெண்கள் 2,19,035;  திருநர் 75).

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது.  இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; திருநர் 55).

அடுத்தபடியாக, இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879 ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; திருநர் 53)." என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com