மின் வெட்டு- வாயைவிட்டு வாங்கிக்கட்டும் நடிகர் மகேந்திரன்!

மாஸ்டர் மகேந்திரன்
மாஸ்டர் மகேந்திரன்
Published on

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, டெல்டா பகுதிகளில் அதிகமாக நிலவும் மின்சாரச் சிக்கலுக்கு சரிவரத் தீர்வு காணப்படாமல் இருந்துவருகிறது. இதுகுறித்து பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திரைப்பட நடிகர் மாஸ்டர் மகேந்திரன் என்பவர் மின் வெட்டு பாதிப்பைப் பற்றி மிகவும் அலட்சியமாகவும் திமிராகவும் தெனாவெட்டாகவும் பேசியுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 

மின்வெட்டுக்காக முதலமைச்சர் விஜய்யைப் பற்றி மைக் முன்னால் பேசிவிட்டால், மின்சாரம் வந்துவிடுமா என மக்களின் அவதியைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், எகத்தாளமாகவும் அந்த நடிகர் பேசியுள்ளார்.

இவர், முன்னரே, லேபிள் எனும் இணையத் தொடரில் மிகவும் ஆபாசமாகப் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அப்போதும் அதை நியாயப்படுத்திப் பேசினார்.

இப்போது மக்களின் அவதியைப் பற்றி அக்கறைப்படாமல் இருந்தாலாவது பரவாயில்லை, அவர்களின் துன்பத்தைப் பார்த்து சிரிப்பதாக இவருடைய கேள்வி அமைந்திருப்பதே பிரச்னைக்குக் காரணம்.

நாட்டாமை படத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரமான இவர், பல படங்களுக்குப் பிறகு, விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் இளைஞனாக அடையாளம் காணப்பட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com