தமிழ் நாடு
சென்னையில் அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
சென்னை, கண்ணகி நகர் பகுதியில் வசித்துவந்தவர், வரலட்சுமி. இவருக்கு வயது 30.
வழக்கம்போல அதிகாலையில் துப்புரவுப் பணிக்காகக் கிளம்பினார். அந்தப் பகுதியில் இருந்த மின்சார வடத்தைச் சரிசெய்யாமல் சாலையிலேயே போட்டுவைத்திருந்தனர்.
மழையில் இதை அறியாமல் காலைவைத்த வரலட்சுமி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானார். அவரைக் காப்பாற்ற முயன்ற இன்னொருவர் தூக்கிவீசப்பட்டார்.
வரலட்சுமி மின் தாக்குதலால் துடிதுடித்தபடி உயிரிழந்தார்.
சென்னையில் ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்திய உழைப்போர் உரிமை இயக்கம், இதற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.