மீண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்- உதயச்சந்திரனுக்கு டிக்!

Tamilnadu government secretariat
தலைமைச் செயலகம்
Published on

புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து வரிசையாக உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட உதயச்சந்திரன் தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் இருந்துவரும் குமார் ஜெயந்த், செய்தித்தாள் காகித நிறுவனத் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்.  

சுகாதாரத் துறை செயலாளராக தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரின் மூன்றாவது செயலாளர் அனு ஜார்ஜ், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்துறையின் சிறப்புச் செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், சமூகநலத் துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com