மு.க.ஸ்டாலினின் கூட்டணி ஆட்சிப் பேச்சு- தமிழக காங்கிரஸ் தலைவர் சமாளிப்பு
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதைப்பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சமாளித்து பதில்சொன்னார்.
தில்லியிலிருந்து சென்னைக்கு வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காலையில் முதலமைச்சர் பேசியதைப் பற்றி கேட்டதற்கு, இதுகுறித்து காங்கிரஸ் தலைமையும் முதலமைச்சரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பார்கள் என்றார்.
எங்கள் கட்சித் தலைவர்கள் அவர்களின் கருத்தைச் சொல்கிறார்கள்; முதலமைச்சர் அவருடைய கருத்தையும் கட்சிக் கருத்தையும் தமிழ்நாட்டில் நாட்டு நடப்பு என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் இப்படிச் சொல்லிவிட்டார், இவர் அப்படிச் சொல்லிவிட்டார்; இதனால் கூட்டணிக்குள் விரிசல், பிரச்னை வருமா எனக் காத்திருக்கிறார்கள்; அப்படி ஒருபோதும் நிகழாது என்றும் அவர் கூறினார்.

