முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து - எதிர்ப்பையடுத்து மாற்றிக்கொண்ட உயர்நீதிமன்றம்

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

உயர்நீதிமன்ற நிர்வாகம் நடத்தவுள்ள சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடாமல் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதாக அறிவித்த அதன் நிர்வாகம், இப்போது அதை வாபஸ் வாங்கியுள்ளது. 

கடந்த 11ஆம் தேதியிட்ட உயர்நீதிமன்றத் தலைமைப்பதிவாளரின் சுற்றறிக்கையில், உயர்நீதிமன்ற சென்னை இருக்கை, மதுரை அமர்வு, நீதித்துறை அகாடமி, மாவட்ட நீதிமன்றங்களில் வந்தே மாதரம் முதலிலும் தேசிய கீதம் இரண்டாவதாகவும் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர் அமைப்புகள் ஆங்காங்கே நாளைய வந்தேமாதரப் பாடலுடன் நடக்கும் விழாக்களைப் புறக்கணிப்பதென முடிவெடுத்தன. 

அதன் தொடர்ச்சியாக, இன்று, உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில், தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தேமாதரம் ஆகியவற்றுடன் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com