
அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பேசினர்.
நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை விடுத்தனர்.
தொகுதி மறு வரையறை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காரணம் காட்டி ஒன்றிய அரசு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதை ஏற்கக்கூடாது எனவும்,
சமூக நீதி சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்த தமிழக சட்டமன்றத்தில், பெண்கள் இட ஒதுக்கீட்டை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே செயல்படுத்திட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா, இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கண்ணகி, மாநிலத் தலைவர் மஞ்சுளா, அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் மனிதி செல்வி, பிலோமினா, மேரி லில்லி, ஜாக்குலின், ரமணி, வசுமதி, ரேவதி, ஆகியோர் கலந்துகொண்டனர்.