தமிழ் நாடு

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு விரைவில் வரவுள்ள நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படுகின்றன.
கல்லூரிக் கல்வி இயக்ககம் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
வரும் 29ஆம்தேதிவரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.tngasa.in எனும் இணையதளம் மூலமாக இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.