
வங்கக் கடலில் நிலவும் மோந்தா புயல் காரணமாக சென்னைக்கு வந்துசெல்லும் ஆறு விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
புயலானது இன்று மாலை அல்லது இரவு ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடா பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதையொட்டி இன்று பிற்பகல்வரை சென்னைக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே ஆறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
புயலையொட்டி ஆந்திராவில் கடும் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் காலைவரை 19 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
காற்றின் வேகமும் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்திவைத்துள்ளனர்.
கடற்கரைகளில் வேடிக்கை பார்க்கக் கூடிய சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரையும் ஆந்திர காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றியது.
இதனிடையே, விஜயவாடா, இராஜமுந்திரி, கர்னூல் ஆகிய ஊர்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதும் தாமதம் ஆகியுள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.