அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியம் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, யார் அந்த சார் எனக் கேட்டு அ.தி.மு.க. இன்று போராட்டம் நடத்தியது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்தப் பிரச்னை தொடர்பாக தகவல்நுட்ப அணி செய்துவரும் பிரச்சாரத்துக்காக அவர்கள் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
மக்களும் யார் அந்த சார் என்று கேட்பதாகவும் நீதிக்காகவே தாங்கள் போராட்டம் நடத்தியதாகவும் பழனிசாமி கூறினார்.
முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகர், இன்னொரு சாருடன் இரு எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; இதுகுறித்து போலீஸ் சரியான பதிலைக் கூறவில்லை என்றும் அவர் குறைகூறினார்.
இதில் காவல்துறை ஆணையர் கூறியதை உயர்கல்வி அமைச்சர் மறுக்கிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.