தமிழ் நாடு
திரைப்பட நடிகர் இரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்தித்துப் பேசினார்.
சென்னை, போயஸ்தோட்டப் பகுதியில் உள்ள இரஜினியின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், இரஜினியை மரியாதைநிமித்தமாகவே சந்தித்ததாகத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. தொடர்பான வழக்கு போய்க்கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் விரைவில் இணைந்துவிடும் என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா இன்று ஊடகத்தினரிடம் கூறியிருந்தார்.
பன்னீர்செல்வம் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த தமிழிசையும் திடீரென தில்லிக்குப் பயணம் செய்திருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.