ரிப்பன் மாளிகை போராட்டக்காரர்கள் அனைவரும் விடுதலை!

ரிப்பன் மாளிகை போராட்டக்காரர்கள் அனைவரும் விடுதலை!
Published on

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களைத் தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை நேற்று நள்ளிரவில் போலீஸ் கைதுசெய்தது. 

பதினைந்து இடங்களில் அவர்கள் தனித்தனியாக அடைத்துவைக்கப்பட்டனர். 

போராடிய தொழிலாளர்களுடன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்கள், மாணவர்களும் சேர்த்து கைதுசெய்யப்பட்டனர். 

அவர்களில் சட்ட மாணவர் வளர்மதி என்பவரையும் அவரைப் பார்க்கச் சென்ற வழக்குரைஞர் நிலவுமொழி என்பவரையும் போலீஸ் கடுமையாகத் தாக்கியதாகப் புகார் எழுந்தது. அவர்களைச் சந்திக்கச் சென்ற செய்தியாளர்கள், வழக்குரைஞர்களுக்கு போக்கு காட்டியபடி பல போலீஸ்நிலையங்களுக்கு அவர்கள் அழைத்துசெல்லப்பட்டனர். 

மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாகக் கூறி இப்படி அலைக்கழித்ததில் வளர்மதி மயங்கிவிட்டார். அவரைக் கைதும்செய்யாமல் வண்டியில் வைத்து சுற்றியதால் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அவர்களுக்கு ஆதரவாக வழக்குரைஞர் சங்க நிர்வாகிகளும் சக வழக்குரைஞர்களுமாக 200-க்கும் மேற்பட்டவர்கள் வாதாடினர். 

அரசுத் தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், பிடித்துச்சென்றவர்களை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டனர். 

இதே சமயம், 4 வழக்குரைஞர்கள், 2 சட்ட மாணவர்கள் இந்த விவகாரம் பற்றி சமூக ஊடகங்களில் எழுதவோ பேசவோ கூடாது என நிபந்தனை விதித்தனர். 

வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com