தமிழ் நாடு

புலி திரைப்படத்தில் நடித்ததில் கிடைத்த 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டியதற்காக த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்க்கு வருமான ரித் துறை 2022 ஜூனில் 1.5 கோடி ரூபாய் தண்டத்தொகை விதித்தது.
ஆனால், அவர் இத்தொகையைக் கட்டாமல் தண்டத்தை இரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அவருடைய மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. அதில், வருமான வரித் துறையின் உத்தரவு சரிதான் எனக் கூறிவிட்டது.
விஜய் தரப்பில் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தீர்ப்பாயத்தில் முறையிட அனுமதி அளித்தது.