வடசென்னை, யானைகவுனியில் மழை பாதிப்பைப் பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ் நாடு
வடசென்னை பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வை!
துணைமுதலமைச்சர் உதயநிதி நேற்று சென்னையின் தென்கோடிப் பகுதிகளுக்குச் சென்று மழை பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார்.
சற்றுமுன்னர், அவர் யானைகவுனி பகுதியில் மழை பாதிப்புகளைப் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அவருடன் நகராட்சித் துறை அமைச்சர் நேரு, வடசென்னை பகுதியைச் சேர்ந்த அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற, மாநகராட்சிமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
