வருசநாடு, மேகமலையைக் காக்க நடைபயணம்!

வருசநாடு மக்கள் நடைபயணம்
வருசநாடு மக்கள் நடைபயணம்
Published on

திருவில்லிபுத்தூர் மேகமலை, தேனி மாவட்டம் வருசநாடு பகுதிகளில் வாழும் பழங்குடி, மலைவாழ் மக்கள், பாரம்பரியமாக வாழ்ந்து வரும் விவசாயிகளை வெளியேற்ற உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்தும் அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் இன்று நடைபயணம் தொடங்கியது. 

காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியிலிருந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் நடைபெற்று வருகிறது

இதை, திருப்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தொடங்கி வைத்தார். 

இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.கௌரி தலைமை தாங்கினார்.

மாவட்டச்செயலாளர் க.மணிகண்டன் முன்னிலை வகித்தார். 

மாநிலச் செயலாளர் க.பாரதி, மாநிலத் தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள் ஆகியோரும் பேசினர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com