வள்ளுவர் சிலை வெள்ளி விழா- ஆசிரியர், அரசு ஊழியர்களுக்குப் போட்டி!

குமரி முனை திருவள்ளுவர் சிலை
குமரி முனை திருவள்ளுவர் சிலை
Published on

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. 

”குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில், மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்த போட்டியின் மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல் நிலை எழுத்துத் தேர்வில் பங்குபெறும் வகையில், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக Google Link அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பகிரப்பட்டு பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

பங்கேற்க தகுதி உள்ள போட்டியாளர்கள், முன்பதிவு செய்ய முடியாத பட்சத்தில், நேரடி பதிவு (SPOT REGISTRATION) முறையில்  நேரடியாக போட்டி நடைபெறும் தேர்வு மையத்திற்கு சென்று பங்கேற்கலாம். இந்த முதல்நிலைத் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் அனைவரும் பிற்பகல் 1 மணிக்கு முன்பாக அந்தந்த தேர்வு மையத்திற்கு அடையாள அட்டையுடன் வருகை புரிந்து, பதிவு செய்து பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களின் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் தேர்வு மையங்களின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட ஒருகிணைப்பு அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com