வானத்திலிருந்தா சோறு வரும்?- அன்புமணி ஆவேசம்!

வானத்திலிருந்தா சோறு வரும்?- அன்புமணி ஆவேசம்!
Published on

தமிழக உழவர் பேரியக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை, சந்தைமேட்டில் இன்று மாலையில் தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பா.ம.க.தலைவர் அன்புமணி, வளர்ச்சித் திட்டங்களை விவசாயத்துக்குப் பாதிப்பில்லாமல் கொண்டுவருமாறு வலியுறுத்தினார். 

வேலைவாய்ப்பு வேண்டுமென்றால் தொழிற்சாலைகள் வரவேண்டும்; நிலமும் வேண்டும் என்றால் ஆகாயத்திலா போய் தொழிற்சாலையைக் கட்டமுடியும் என்று அமைச்சர் வேலு சில மாதங்களுக்கு முன்னர் கூறி, சர்ச்சைக்கு உள்ளானார். அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அன்புமணி, தொழிற்சாலைகளாகக் கட்டிக்கொண்டே சென்றால் வானத்திலிருந்தா சோறு வரும் என எதிர்க்கேள்வி கேட்டார். 

வேலுவின் பெயரைக் குறிப்பிடாமல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சர் வியாபாரியாக இருக்கிறார்; இப்படியான நான்கு பேர்தான் முதலமைச்சரைச் சுற்றி இருக்கிறார்கள் என்று கடுமையாகச் சாடினார். 

அடுத்து பேசிய பா.ம.க. நிறுவனர் இராமதாசும், விவசாயிகளுக்கு எதிரானது திராவிட மாடல் அரசு என்று சாடினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com