சென்னையை அடுத்த மறைமலை நகரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் அறிமுக, பிரச்சாரக் கூட்டம் இன்று மாலையில் தொடங்கியது.
கர்நாடகத் துணைமுதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உட்பட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னுடைய அரசின் சாதனைகள் எனப் பட்டியலிட்டுப் பேசினார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய கொளத்தூர் பேச்சுக்குப் பதிலடியும் கொடுத்தார்.
அரசியலுக்கு வரும்போதே வாய்க்கரிசி போட்டுவிட்டுத்தான் தி.மு.க. காரன் வருவான் என மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் குறிப்பிடுவார்; அதையேதான் நானும் சொல்கிறேன்; ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் அப்படித்தான்; தலைமைத் தொண்டனான நான் மட்டும் பயந்து ஓடிவிடுவேனா? கடைசி மூச்சுவரை பொதுவாழ்வில் செயல்படுவேன்; முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னரே கொரோனா பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்; பதவியேற்றதும் கொரோனா முகாமைத்தான் நேரில் போய்ப் பார்த்தேன் என்று ஸ்டாலின் பேசினார்.