வி.சி. கட்சியின் திருச்சி மண்டலத் துணைச்செயலாளர் வழக்குரைஞர் இராஜா என்கிற மன்னனை அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ மன்னன் மீது மண்டலச் செயலாளர் தமிழாதன் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தைச் சார்ந்த இவர், தொடர்ந்து கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தலைமையின் கவனத்துக்குத் தெரியவந்துள்ளது.” என்றும்,
”ஏற்கனவே, இவர்மீதான பல்வேறு புகார்கள் தலைமையின் கவனத்துக்கு வந்தபோது, அவரைக் கண்டித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவாகியிருப்பது கட்சியின் மீதான நன்மதிப்புக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக மக்கள் விரோத மற்றும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இராஜா என்கிற மன்னன் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்ப்படுகிறார்.” என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.