விஜய் அரசின் வெள்ளை அறிக்கை முக்கிய அம்சங்கள்!

நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை
நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை
Published on

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விஜய் தலைமையிலான அரசாங்கத்தின் சார்பில் நேற்று இரவு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிநிலைமையின் தன்மை மோசமாக உள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறையின் அளவு மோசமடைந்து முன் எப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது என்றும் கொரோனா காலத்தைக் காட்டிலும் மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மொத்த உள் உற்பத்தி மதிப்பில் இதன் அளவு 2.25 சதவீதத்திலிருந்து ஐந்து ஆண்டுகளில் 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது; இது நிதிந்லை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் வரம்பை மீறியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் சொந்த வரி வருவாய் சதவீதம் 5.93 சதவீதத்திலிருந்து 5.45 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது, இதுவரையிலும் இல்லாத அளவு என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்த நிலுவைக் கடனின் அளவு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் வரம்பான 25.2%-ஐவிடக் கூடுதலாக 28.3 சதவீதமாக உள்ளது என்றும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே சமயம், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மூலதனச் செலவினம் 1.44 சதவீதமாகச் சரிந்துள்ளது என்றும் தவிர்க்கவியலாத செலவினத்தின் அளவு 64.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதிப் பற்றாக்குறையின் அளவு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் 3 சதவீதம் என்பது ஒவ்வோர் ஆண்டும் மீறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com