விஜய் இப்போது வரவேண்டாம் - கர்நாடக முதல்வர்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
Published on

முதலமைச்சர் விஜய்யை இப்போதைக்கு கர்நாடகத்துக்கு வரவேண்டாம் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். 

பெங்களூரில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து என்னுடைய அலுவலகச் செயலாளரைத் தொடர்புகொண்டு கர்நாடகத்திற்கு வந்து என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் பல விவகாரங்கள் பற்றி விவாதிக்க இருப்பதாகவும் கேட்டுக்கொண்டனர். அதை நாங்களும் ஏற்றுக்கொண்டு, ஆகஸ்ட் மூன்றாம் தேதி சந்திப்பது என முடிவுசெய்தோம். இப்போது நிலவரம் சரியாக இல்லை. எனவே, அவரை வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com