தமிழ் நாடு
விஜய்யின் த.வெ.க.வில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இணைவாரா என்று திடீர்ப் பேச்சு கிளம்பியிருக்கிறது. இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, இதுஊகம்தான் என்றார்.
விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்தான் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
பல முறை தொடர்ந்து தான் இதைப் பற்றிப் பேசிவிட்டதாகவும் ஆனாலும் மீண்டும் கேட்கப்படுகிறது என்றும் மக்கள் இப்படியொரு கோணத்தில் சிந்திக்கிறார்கள் என்று கருதிக்கொள்வதாகவும் சகாயம் கூறினார்.
ஆட்சி மாற்றம் என்பது காட்சி மாற்றமாக இருக்கிறது; சமூக அவலங்களுக்கு எதிராக சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்; அதை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளும் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அரசியலாளர்களும் சரியாக இருக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மேலும், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.