பொது, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், தொடக்கம் முதலே நகைச்சுவையாகப் பேசினார்.
இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் இரமேசைப் பற்றிக் குறிப்பிட்டபோது, சாமி அமைச்சர்..சாமி என்று குறிப்பிட்டார்.
பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் குறிக்கிட்டு, அறநிலையத் துறை அமைச்சர் எனக் குறிப்பிடச் சொன்னார். ஆனால் அது அவர் காதில் விழாதபடி பேசிக்கொண்டிருந்தார்.
பிறகு, அவருடைய கட்சியினரே திருத்திக் கூற பன்னீர்செல்வம் தன் பாணியிலேயே பேசினார்.
அப்போது, முதலமைச்சர் விஜய் இதைக் கேட்டு இரசித்து சிரிப்பாகச் சிரித்தார்.
வழக்கமாக, பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அவை நடவடிக்கைகளை கவனிக்கும் முதலமைச்சரை இன்று நன்றாகச் சிரிக்க வைத்தார், பன்னீர்செல்வம்.