
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்புப் பணி அதிகாரியாக ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டது இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் பதவிக்கு ரத்தன் நியமிக்கப்பட்டதற்கு இடதுசாரி அமைப்புகள், கட்சிகள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், வி.சி.க. தலைவர் திருமாவளவன், அவர் த.வெ.க. செய்தித்தொடர்பாளராக இருப்பதால் நியமித்திருக்கலாம் எனக் கருதுவதாகக் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா பேசுகையில், இராஜகுருவாக தனிப்பட்டு வைத்துக்கொள்ளலாம்; அரசுப் பதவியில் அமர்த்தியதைப் பற்றி முதலமைச்சர் பதில் அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
ம.ஜ.க.வின் தமிமுன் அன்சாரி, தனிப்பட்ட நம்பிக்கைகளை அரசுமயம் ஆக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
வி.சி.க.வின் வன்னியரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர், பதில் உரையில் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த நியமனத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்வேன் என்றார்.
அதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.