தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

வீடியோ- ஆதீனத்துக்கு மிரட்டல்... அ.தி.மு.க. நிர்வாகி தலைமறைவு!

தருமபுரம் ஆதீனத்தை ஆபாசக் காணொலி இருப்பதாக மிரட்டிய விவகாரத்தில் இப்போது அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரும் சிக்கியுள்ளார். 

முன்னதாக, இந்த விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டதுடன், 4 பேர் கைதும் செய்யப்பட்டனர். 

அதையடுத்து, தி.மு.க. நிர்வாகி ஒருவரும் இதில் தொடர்புடையவர் என அ.தி.மு.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் நிர்வாகியான ஜெயச்சந்திரன் என்பவரும் ஆதீனத்தை மிரட்டியதில் ஈடுபட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையின் தனிப்படையினர் அவரைத் தேடும் தகவல் கிடைத்ததும் உடனே அவர் தலைமறைவாகிவிட்டார். 

ஜெயச்சந்திரனைப் பிடிக்க காவல்துறையினர் புதுச்சேரிக்குச் சென்றுள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com