வெத்து பதில் விஜய்- மானியக் கோரிக்கை ஏமாற்றம்!

CM Vijay
முதலமைச்சர் விஜய்
Published on

காவல், தீயணைப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். 

அவர் பேசுகையில், முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசுகையில் கூறியபடி, சொன்னதையே திரும்பச் சொல்லும் பாணியில் பேசினார். 

பல அறிஞர்களின் மேற்கோள்களைக் காட்டினார். 

நவீன காவல்துறை இப்படித்தான் இருக்கும் என்று நான்கு முறை சொன்னதையே மீண்டும் மீண்டும் தன் உரையில் குறிப்பிட்டார். 

தலைநகரில் ஆளும் த.வெ.க. நிர்வாகியே படுகொலை செய்யப்பட்டது கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், அதைப் பற்றிய எந்தவொரு அலட்டலையும் அவர் தன் உரையில் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. 

பெண்களைப் பற்றி அவதூறு செய்யக்கூடாது என்பதை அவர் தன் பேச்சில் அழுத்தமாகக் குறிப்பிட்டார். 

தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா, முதலமைச்சரின் பதில் உரையில் இலட்சக்கணக்கான காவலர்களுக்கான அறிவிப்புகளை எதிர்பார்த்ததாகவும் அது இல்லை எனவும் ஏமாற்றம் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியோ, " அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - திசைதிருப்பும் உத்தி- மொத்தத்தில் எந்தத் தயாரிப்பும் இல்லாமல், ரோல் கேமரா, ஆக்சன் பாணியில் கிரிஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார் டம்மி முதலமைச்சர்.

எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், அடுத்த முறை நன்றாகச் செய்வதற்கு இன்னும் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று விமர்சித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com