வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; நாளை பரிசீலனை!

வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; நாளை பரிசீலனை!
Published on

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தமிழகத்தில் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை மேற்கொள்ளப்படும்.

இன்று மனுத்தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.

மூத்த அமைச்சர் துரைமுருகனும் மற்ற பல அமைச்சர்களும் இன்றுதான் மனுத்தாக்கல் செய்தனர்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் இன்று மனு தாக்கல்செய்தார்.

அவரின் மனுத்தாக்கலின்போது அறைக்குள் அதிகம் பேர் நுழைந்ததால், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபமடைந்து அவர்களை அங்கிருந்து வெளியே போகுமாறு கூறினார்.

ஐந்து பேருக்கும் அதிகமாகக் கூட தேர்தல் விதிகள் அனுமதிப்பதில்லை என்பதால், கூடுதலானவர்கள் வெளியேறும்வரை அவர் கடுமையாக நடந்துகொண்டார்.

பின்னர், அவர் பிரேமலதாவிடம் வேட்பு மனுவைப் பெற்றுக்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com