ஸ்டாலின் சம்பந்தி உடல் நாளை தகனம்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி
சபரீசன் தந்தை வேதமூர்த்தி
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், தேர்தல் உத்திவகுப்பு துறை தொழில்முனைவோருமான சபரீசனின் தந்தை வேதமூர்த்தி சென்னையில் இன்று காலமானார்.

உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை அவர் இயற்கை எய்தினார்.

திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கம் கிழக்கு, ஏஜிஎஸ்  காலனி, இரண்டாவது குறுக்கு தெரு, பிளாட் எண். சி 15 என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நாளை (12.9.2025) மாலை 3 மணியளவில் சென்னை, பெசன்ட் நகர் மின்மயானத்தில் எரியூட்டப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

வேதமூர்த்தியின் மறைவுக்கு வைகோ, காதர் மொகிதீன் முதலிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com