டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறையை கண்டித்த 2 நீதிபதிகள் திடீர் விலகல்!

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில் குமார்
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில் குமார்
Published on

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கிலிருந்து சென்னை இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில் குமார் ஆகியோர் விலகியுள்ளனர்.

நீதிபதிகளை விலகியதைத் தொடர்ந்து, இவ்வழக்கு வேறோரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது; அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது; விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிா்வாக இயக்குநர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்று மாா்ச் 25-ஆம் (இன்று) தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இன்று இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் இருவரும் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com