ஆளுநர் மாளிகையில் இருந்து ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு...முக்கிய குற்றவாளி சிக்கினார்!

ஆளுநர் மாளிகையில் இருந்து ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு...முக்கிய குற்றவாளி சிக்கினார்!
Published on

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங்கள் கலைந்து கிடந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில் தலைக்கவசம் அணிந்த ஒருவர் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து, ஆவணங்கள் மற்றும் 4 முக்கிய ஹார்ட் டிஸ்க்குகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஆளுநர் மாளிகை ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்தின் பேரில் ஆளுநர் மாளிகையின் கணினி ஹார்ட்வேர் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஸ்ரீனிவாஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருடுபோன ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தரவுகளை ஆராய்ந்து வரும் காவல்துறையினர், திருடுக்கான காரணத்தையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com