இன்றும் நாளையும் 3 டிகிரி வெப்பம் உயரும்!

வெப்ப நிலை
வெப்ப நிலை
Published on

“தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் பகல் நேரத்தில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

அதே நேரம், பிப்ரவரி 18ஆம் தேதி வரை பெரும்பாலானப் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com