செய்திகள்
மதுரை தவெக மாநாட்டுத் திடலில் 100 அடி கொடி கம்பம் நிறுவும்போது கிரேன் பெல்ட் அறுந்த காரணத்தால் கொடி கம்பம் கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை நடைபெறும் 2ஆவது மாநில மாநாட்டு நடைபெற உள்ளது .அதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாநாட்டு திடலில் 100 அடி உயர கொடி கம்பத்தை நடுவதற்கு முயற்சித்த போது, கிரேனின் பெல்ட் அறுந்ததால் கொடி கம்பம் அருகே இருந்த இன்னோவா கார் மேலே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.