தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக கடவுள் பெயரை மிஸ் யூஸ் பண்ணுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
காட்பாடிக்கு ரெயிலில் வந்திறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பில் மனம் நிறைந்துவிட்டது. 2026 மட்டுமல்ல, 2031, 2036 என எப்போது இருந்தாலும் நாம்தான் என்பதை வரவேற்பு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது
நாட்டின் மொத்த வளர்ச்சியில் சுமார் 10 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாட்டின் உடையது. தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக உருவாகி வருகிறது தமிழ்நாடு.
பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்று உள்ளது. ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் தருகிறார்கள். இந்த பணத்தில் வீடு கட்ட முடியுமா? அதிலேயும் ரூ.72,000 மட்டும்தான் மத்திய அரசு தருகிறது. மீதி கூடுதலாக ரூ.1.62 லட்சம் மாநில அரசு கொடுத்து வீடு கட்டித் தருகிறோம். பெயர்தான் அவங்களோடது. நிதி நம்முடையது.
தமிழ்நாட்டு மக்களை சாதியால் மதத்தால் பிளைவுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அது முடியாத போது இங்குள்ள அதிமுக கட்சியை சேர்த்துக் கொள்கிறார்கள். பாஜகவும் அதிமுகவும் மக்களை பத்தி கவலைப் படாமல் மதத்தை பத்தி கவலைப்படுகிறார்கள். கட்சியை வளர்க்க மிஸ்டு கால் எல்லாம் கொடுத்துப் பார்த்தார்கள். தங்களின் அரசியல் லாபத்துக்காக கடவுள் பெயரை மிஸ் யூஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போலி அரசியலை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது.
பெரியாரை அண்ணாவை கொச்சைப்படுத்தி ஒளிபரப்பப்பட்ட வீடியோவை கைக்கட்டி வேடி பார்க்கிறார்கள் அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம். அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டார்கள். இவர்கள் நாளைக்கு தமிழ்நாட்டை அடமானம் வைக்க அனுமதிக்கக் கூடாது. ” இவ்வாறு அவர் கூறினார்.