நாங்கள் நாகரிகம் அற்றவர்களா?. உதயநிதி ஸ்டாலின் பதிலடி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டை இழிவுபடுத்துவது மத்திய அரசின் கொள்கை முடிவு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில் தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டத்தின் இணைய முகப்பை சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

நாங்கள் என்ன நாகரிகம் அற்றவர்களா?. எங்களைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா?. இப்படி சொல்பவர்கள்தான் நாகரிகமில்லாமல் தமிழர்களை விமர்சிக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழ்நாட்டையும், பெரியாரையும் இழிவுபடுத்துவது மத்திய அரசின் ஒரு பேர்ட்டன். இதையே ஒரு கொள்கை முடிவாக வைத்துள்ளனர்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். மும்மொழி கொள்கை விவகாரத்தை திசை திருப்பவே மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com