பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி - பண்ருட்டி ராமச்சந்திரன்

Published on

2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை புறக்கணித்து வருகிறது. பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களை சந்திப்பதற்கு ஒ.பி.எஸ். சார்பில் அனுமதி கேட்கப்படும். ஆனால், அவருக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை.

இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், “தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேற வேண்டும். பன்னீர்செல்வத்தை பாஜக புறக்கணிக்கிறது. அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜகவை வளர்க்கக் கூடிய எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது.

அந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்-க்கு நன்மை இல்லை... 'மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன்' என கும்பிடு போட்டு வெளியே வருவதே நிம்மதி. நாட்டுக்கு நல்லது. தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஒரு ஆபத்தான கூட்டணி.

விஜய் - ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம்.

திமுக – விஜய் இடையேதான் போட்டி என நினைக்கிறேன். விஜய்யின் அரசியல் பாதையும் சரியாக உள்ளது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com