"உடன்படா கருத்தையும் உரைக்கின்ற உன் உரிமையை, உயிரை தந்தேனும் காப்பேன்" என்று பாமகவின் திலகபாமா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 10ஆம் தேதி பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாசை நீக்கியும், இனி நானே தலைவர் என்றும் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். இதற்கு அன்றைய தினமே எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. பொருளாளர் திலகபாமா, ‘இது ஜனநாயக படுகொலை’ என பதிவிட்டிருந்தார்.
இதனால், பா.ம.க. பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில், "உடன்படா கருத்தையும் உரைக்கின்ற உன் உரிமையை, உயிரை தந்தேனும் காப்பேன்" என வடிவேல் ராவணனின் காட்டமான அறிக்கையை தொடர்ந்து திலகபாமா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
உட்கட்சி விவகாரத்தில் தொடர்ந்து கருத்து சுதந்திரத்துக்காக கருத்து தெரிவிக்கும் திலகபாமா மீது நடவடிக்கை பாயுமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.