புதிய சாம்பியன் பட்டம் வென்ற தங்க மகன்!

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Published on

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார்.

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி செக் குடியரசு நாட்டில் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும் பாரிஸ், டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

இப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் பவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பில் 83.45 மீட்டர் தூரம் வரை ஈட்டியை எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் 85.29 மீட்டர் தூரத்திலும் நான்காவது வாய்ப்பில் 82.17 மீட்டர் தூரத்திலும் ஐந்தாவது வாய்ப்பில் 81.01 மீட்டர் தூரத்திலும் எறிந்த நீரஜ் சோப்ரா இறுதி வாய்ப்பில் பவுல் செய்தார்.

இதன் மூலம் மற்றவர்களைவிட அதிகபட்சமாக மூன்றாவது வாய்ப்பில் 85.29 மீட்டர் எறிந்த இவர், முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். அதே போல் 6 வாய்ப்புகளில் 2 வாய்ப்புகளைத் தவறவிட்ட தென்ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த தவ் ஸ்மித் அதிகபட்சமாக 84.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இவரைத்தொடர்ந்து கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் அனைத்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் 83.63 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தை பிடித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com