இந்தியாவின் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த தமிழ்ப் படமாக பார்க்கிங் திரைப்படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை 2023ஆம் ஆண்டுக்கான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கான போட்டியில் 332 படங்கள் இடம்பெற்றன.
தமிழில் சிறந்த திரைப்படமாக பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ், கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் உட்பட்டோர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநராக இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
சிறந்த இசையமைப்பாளர்
சிறந்த இசையமைப்பாளராக வாத்தி திரைப்படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்படுகிறது. வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ் - சம்யுக்தா நடித்திருந்தனர்.
71ஆவது தேசிய விருதுகள் விவரம்
சிறந்த நடிகர் - ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மஸ்ஸே (12 பெயில்)
சிறந்த நடிகை - ராணி முகர்ஜி (சாட்டர்ஜி vs நார்வே)
சிறந்த தமிழ்த் திரைப்படம் - பார்க்கிங்
சிறந்த குணச்சித்திர நடிகர் (தமிழ்) - எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
சிறந்த திரைக்கதை - பார்க்கிங் (இராம்குமார் பாலகிருஷ்ணன்)
சிறந்த குணச்சித்திர நடிகை (மலையாளம்)- ஊர்வசி (உள்ளொழுக்கு)
சிறந்த மலையாளத் திரைப்படம் - உள்ளொழுக்கு
சிறந்த கன்னடத் திரைப்படம் - கண்டீலு - தி ரே ஆஃப் ஹோப்
சிறந்த தெலுங்கு திரைப்படம் - பகவந்த் கேசரி
சிறந்த பஞ்சாபி திரைப்படம் - கால் ஆஃப் எக்சைட்மெண்ட்
சிறந்த ஒடிசா திரைப்படம் - புஷ்கரா
சிறந்த மராத்தி திரைப்படம் - ஷியாமச்சி ஆய்
சிறந்த இந்தி திரைப்படம் - 12 பெயில்
சிறந்த ஒளிப்பதிவு - தி கேரளா ஸ்டோரி
சிறந்த இயக்குநர் - சுதிப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி)
சிறந்த பின்னனி இசை - அனிமல் (ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்,)
சிறந்த ஒலி வடிவமைப்பு - அனிமல்