கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

ரஜினியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
ரஜினியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Published on

கூலி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழுவின் கேக் வெட்டி கொண்டாடினர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த எதிர்பார்ப்புக்கிடையே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் படத்தின் மேக்கிங் விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

கூலி திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படங்களான மாஸ்டர், விக்ரம், லியோ என பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி முடித்திருந்தார்.

அதேபோல், கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கிய கூலி படத்தின் படப்பிடிப்பையும் தற்போது முடித்துக்கொடுத்துள்ளார். தொடர்ந்து, கைதி - 2 படத்திற்கான வேலைகளையும் லோகேஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com