தவெக மாநாட்டு திடல் தயார்… பாதுகப்பு பணியில் 3000 போலீஸ், 500 பெண் பவுன்சர்கள்!

தவெக மாநாட்டு திடல்
தவெக மாநாட்டு திடல்
Published on

மதுரை பாரபத்தியில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) நடக்கும் விஜய்யின் தவெக மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி, மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே அருப்புக்கோட்டை - தூத்துக்குடி சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை மறுநாள் நடக்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் விடிவிலான மேடை, பார்வையாளர்கள் கேலரிகள், வாகன பார்க்கிங், கொடி தோரணங்கள், பேனர்கள், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், திடலை சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் என மாநாட்டுக்கான பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியபோதிலும் மாநாட்டு திடல் ஏறக்குறைய தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர்கள் கல்லாணை, தங்கப் பாண்டி உள்ளிட்ட மதுரை மாவட்டம் மற்றும் பிற மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாநாடுக்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கென சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக வெளியூர்களில் இருந்தும் காவல் துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள், 500 பெண் பவுன்சர்களும் தவெக சார்பில் ஏற்பாடு செய்திருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

மாநாட்டுக்கு விஜய்யை அழைக்கும் விதமாக அக்கட்சியினர் வைத்துள்ள பேனர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்நிலையில், நாளை மறுநாள் நடக்கவிருக்கும் மாநில மாநாட்டை சிறப்பாக, மிகுந்த பாதுகாப்புடன் நடத்துவது பற்றி கட்சியின் நிர்வாகிகளு டன் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர். விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு அறிவுரைகளும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கூறப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com