வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
Published on

மக்களவையில் நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், பா.ஜ.க. தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நீண்ட நேரம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com