சதம் அடித்த மகிழ்ச்சில் ஷான் வில்லியம்ஸ்
சதம் அடித்த மகிழ்ச்சில் ஷான் வில்லியம்ஸ்

50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்று: அமெரிக்காவை ஓடவிட்ட ஜிம்பாப்வே!

50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில், அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஷான் வில்லியம்ஸ் பேயாட்டம் ஆடியுள்ளார். 101 பந்துகளை எதிர்கொண்ட அவர் 174 ரன்களை குவித்துள்ளார்.

இந்த வருடம் அக்டோபர் மாதம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். ஜிம்பாப்வே அணி ஏற்கெனவே சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று அமெரிக்காவுடன் மோதியது.

டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அந்த அணியின் கேப்டன் வில்லியம்ஸ் 101 பந்துகளில் 174 ரன்களை எடுத்து, அமெரிக்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். இதில் 21 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்களை குவித்தது.

இமாலய இலக்குடன் ஆடத் தொடங்கிய அமெரிக்க அணி வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 25 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com