செய்திகள்
தி வயர் ஆங்கில இணைய ஊடகத்துக்கு இந்தியாவில் திடீரெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஊடகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும்வகையில் நாடு முழுவதும் தி வயர் ஊடகத்தை அணுகமுடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கேட்டதற்கு, மத்திய மின்னணு, தகவல்நுட்ப அமைச்சகத்தால் தகவல்நுட்பச் சட்டம்-2000இன்படி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தி வயர் ஊடகத்தினர் கூறியுள்ளனர்.