‘என் படத்துக்கு இதுதான் முதல் முறை…’ நெகிழ்ந்துபோன இயக்குநர் ராம்!

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்
Published on

"மக்கள் தியேட்டரை விட்டு சிரித்துக்கொண்டே வெளியே வருவது என் படத்துக்கு இதுதான் முதல் முறை” என இயக்குநர் ராம் கூறியுள்ளார்.

சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பலரும் பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் முதல் காட்சிக்குப் பின் இயக்குநர் ராம் அளித்த பேட்டி:

“முதல் முறையாக நான் ஒரு நகைச்சுவை படம் எடுத்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். மக்கள் தியேட்டரிலிருந்து சிரித்துக் கொண்டே வருவது என் படத்துக்கு இதுதான் முதல் முறை.

இருப்பதிலேயே சிரிக்க வைப்பதுதான் மிகவும் கஷ்டம். படம் எடுக்கும்போது எனக்கு இருந்த பயம் என்னவென்றால் மக்கள் எங்கு சிரிக்க முடியாமல் போய்விடுவார்களோ என்று நினைத்தேன். பத்திரிகையாளர்கள் காட்சியில் பார்த்த சிரிப்பலையும் கை தட்டலும் அந்த பயத்தை போக்கிவிட்டது. நான் நினைத்தது நடந்திருக்கிறது.

சிவா நிச்சயமாகவே அகில உலக சூப்பர் ஸ்டார்தான். ஒரு கிராமத்தில் அவரை பார்க்க 4000 பேர் வந்துவிட்டார்கள். அதனால் படப்பிடிப்பை நிறுத்தும் அளவுக்கு ஆகிவிட்டது. அதேபோல் படத்தில் சிவா அளவுக்கு கிரேஷ் ஆண்டனியும் பாராட்டப்படுவார்.

என்னுடைய படம் இந்த வெள்ளிக்கிழமை மட்டுமில்லாமல் பல வெள்ளிக்கிழமை ஓடவேண்டும். இருபது ஆண்டுகள் கழித்து ஒருவர் இந்த படத்தை பார்த்தாலும் அவருக்கு என்னுடைய படம் பிடித்திருந்தால் ஒரு இயக்குநருக்கு சந்தோஷம்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com