தி.மு.க. துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்!

திருச்சி சிவா எம்.பி.
திருச்சி சிவா எம்.பி.
Published on

தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

சைவ, வைணவ சமயங்கள் குறித்து கொச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று காலை விடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அந்த பொறுப்புக்கு திருச்சி சிவா எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

”திமுக சட்ட திட்ட விதி: 17 பிரிவு - :3 ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்த வரும் திருச்சி சிவா எம்.பி. அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கபடுகிறார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com