ஆக. 25இல் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு!

த.வெ.க. விஜய்
த.வெ.க. விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் அரசியல் கட்சிகள் பிரமாண்ட மாநாடுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றன. ஏற்கெனவே, தேமுதிகவின் மாநில மாநாடு ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நெல்லையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. அதற்கான கால்கோள் விழா இன்று காலை நடைபெற்றது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அறிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com