விடாமுயற்சி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

 Vidaamuyarchi
விடாமுயற்சி
Published on

விடாமுயற்சி திரைப்படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். துணிவு திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அஜித் படத்திற்காக மிக ஆவலாக அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் விடாமுயற்சி வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தை ஜனவரி இறுதியில் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக சென்சார் சான்றிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், விடாமுயற்சி திரைப்படம் 2.30 மணிநேரம் கொண்ட படம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com